மாவட்ட செய்திகள்

‘தினத்தந்தி’ ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து நடத்தும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற மாபெரும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி + "||" + TNPL Great guiding program to win the exam

‘தினத்தந்தி’ ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து நடத்தும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற மாபெரும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

‘தினத்தந்தி’ ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து நடத்தும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற மாபெரும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
‘தினத்தந்தி’யும்- ‘ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ்.’ அகாடமியும் இணைந்து டி.என்.பி. எஸ்.சி. தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்துகிறது.
மதுரை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, 2-ஏ மற்றும் குரூப் -4 போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித்தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்துவதிலும் மேற்படிப்புக்கு வழிகாட்டுவதிலும் ‘தினத்தந்தி’ எப்போதுமே முன்னுதாரணமாக இருந்து வருகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மாவட்டந்தோறும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு காரைக்கால், புதுச்சேரி உள்பட 34 மாவட்டங்களுக்கு வருடந்தோறும் 34 லட்சம் ரூபாய் கல்வி நிதி உதவி வழங்குகிறது.

பள்ளி படிப்பினை முடித்து மேற்படிப்பை தொடர இருக்கும் மாணவர்களுக்கு 18 ஆண்டுகளாக ‘வெற்றி நிச்சயம்’ வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது ‘தினத்தந்தி’.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி. நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கும், மாநில அரசின் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, 2, 2-ஏ மற்றும் குரூப் -4 போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் ஆண்டுதோறும் ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. குறிப்பாக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கான முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வுகளை தமிழில் எழுதுவதற்கான நேரடி பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்த அகாடமியின் மூலம் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் மத்திய -மாநில அரசு பணியில் உள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி. போட் டித் தேர்வுகளுக்கு தயா ராகும் வழிமுறைகள் குறித்தும் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள் எவை என்பது குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விரிவாக விளக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டுக்கான குரூப்-4 தேர்வு மூலமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தொடர்ந்து குரூப்-2, குரூப்-2-ஏ தேர்வுக்கான அறிவிப்பும் இந்த மாத இறுதிக்குள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்புமிக்க நிகழ்ச் சியை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு, டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் தலைவர் ஆர். நட்ராஜ் தொடங்கிவைத்து தலைமை உரையாற்றுகிறார். கல்விப்பணியில் தினத்தந்தி குறித்து தலைமை பொது மேலாளர் (புரமோசன்ஸ்) ஆர். தனஞ்செயன் சிறப்புரையாற்றுகிறார். ‘மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற தேர்வுக்கு தயாராவது குறித்து பேராசிரியர் நெல்லை கவி நேசன் விளக்கமளிக்கிறார். பேராசிரியை ஆர். காயத்ரி ஊக்க உரையாற்றுகிறார். ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் ச. வீர பாபு தேர்வில் எளிதில் வெற்றி பெறும் முறை, படிக்கும் முறைகள் குறித்து பயிற்சியளிக்கிறார். பேராசிரியர் அனந்த நாராயணன் மற்றும் கவிஞர் மீனாட்சி சுந்தரம் வாழ்த்துரை வழங்குகிறார்கள். நிகழ்ச்சியை கவிஞர் ச.திருநாவுக்கரசு தொகுத்து வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் TNPSC FREE CLASS என்று Type செய்து தங்களது முழு முகவரியுடன் 7550151585 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். 99419 50001 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பதிவு செய்யலாம். மேலும் 9710 963 963 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணம் ஏதும் கிடையாது. அனுமதி இலவசம். 

அதிகம் வாசிக்கப்பட்டவை