மாவட்ட செய்திகள்

தேர்தல் வாக்குறுதியின்படி திட்டங்களை நிறைவேற்றுவேன் - நவாஸ்கனி எம்.பி. பேச்சு + "||" + According to the election pledge I will carry out plans-Nawazakani.MP Speech

தேர்தல் வாக்குறுதியின்படி திட்டங்களை நிறைவேற்றுவேன் - நவாஸ்கனி எம்.பி. பேச்சு

தேர்தல் வாக்குறுதியின்படி திட்டங்களை நிறைவேற்றுவேன் - நவாஸ்கனி எம்.பி. பேச்சு
தேர்தல் வாக்குறுதியின்படி திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று நவாஸ்கனி எம்.பி. தெரிவித்தார்.
பனைக்குளம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்றார். இவர் கடந்த 3 நாட்களாக தொகுதி வாரியாக மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். இதன்படி மண்டபம் யூனியன் உச்சிப்புளி, புதுமடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், ரெகுநாதபுரம், நயினாமரைக்கான், முத்துப்பேட்டை, வண்ணாங்குண்டு, பெரியபட்டணம் உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- தி.மு.க. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு தேர்தல் சமயத்தில் வாக்காளர்களாகிய உங்களை சந்தித்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருக்கிறேன். இதன்படி முதலில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்.

மேலும் தொகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்கல்வியை தொடர முடியாத மாணவமாணவிகளுக்கு எனது சொந்த செலவில் உயர்கல்வி அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்டபம் ஒன்றியம் பகுதியில் அதிகமான மீனவர்கள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்துள்ளனர். இதை நான் நிறைவேற்றும் வகையில் நமது மாவட்டத்துக்கு தேவையான அரசு நலத்திட்டங்களை போராடி கொண்டு வருவேன்.

வாக்கு சேகரிக்க வந்தபோது ஆதரவு அளித்து பெண்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அதிக வாக்குகள் அளித்து வெற்றி பெறச்செய்துள்ளர்கள். மறவாது உங்களின் ஊழியனாக செயல்படுவேன். மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும் உங்களது கோரிக்கைகளை நேரில் வந்து தெரிவிக்கும் வகையிலும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியிலும் புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன்.

உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை போராடி பெற்றுத்தருவேன். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் தி.மு.க. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலில் மூழ்கி இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் - தமிழக அரசுக்கு நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை
கடலில் மூழ்கி இறந்த பாம்பன் மீனவர்கள் குடும்பத்தை நேரில் சந்தித்து நவாஸ்கனி எம்.பி. ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர கடுமையாக உழைப்பேன் - நவாஸ்கனி எம்.பி. பேட்டி
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர கடுமையாக உழைப்பேன் என ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...