மாவட்ட செய்திகள்

மராட்டிய சட்டசபை தேர்தல் குறித்து தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை : காங்கிரசிடம் 144 தொகுதிகளை கேட்க முடிவு + "||" + Nationalist Congress Party advised the Marathas assembly election

மராட்டிய சட்டசபை தேர்தல் குறித்து தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை : காங்கிரசிடம் 144 தொகுதிகளை கேட்க முடிவு

மராட்டிய சட்டசபை தேர்தல் குறித்து தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை :  காங்கிரசிடம் 144 தொகுதிகளை கேட்க முடிவு
வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் சரிபாதியாக 144 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்க முடிவு செய்துள்ளது.
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற அக்டோபர் மாத வாக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா ஒரு அணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் ஆயத்தமாகி வருகின்றன.

மராட்டிய சட்டசபைக்கு மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில், பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் தலா 135 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், எஞ்சிய தொகுதிகள் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் பா.ஜனதா மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார். கூட்டணி வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவி மீண்டும் பா.ஜனதாவுக்கு தான் வழங்கப்படும் என்று பா.ஜனதாவை சேர்ந்த மற்றொரு மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறினார்.

பா.ஜனதா மந்திரிகளின் இந்த கருத்துக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலும் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகவில்லை. இந்த நிலையில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொங்கன் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. இதற்கு கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் தலைமை தாங்கினார்.

இதில் மும்பை, தானே உள்ளிட்ட கொங்கன் பகுதிக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரசுடன் சேர்ந்து தேர்தலை முழு பலத்துடன் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. பா.ஜனதா, சிவசேனா கூட்டணியை வீழ்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனையின் போது, தேசியவாத காங்கிரசுக்கு சரிபாதியாக 144 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக காங்கிரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் பேசினர்.

தற்போது தேசியவாத காங்கிரசுக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் 18 முதல் 20 வேட்பாளர்கள் 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். இதனால் நம்மிடம் தற்போது 60 முதல் 65 வெற்றி வேட்பாளர்கள் இருப்பதால், நிச்சயம் சரிபாதி தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

மேலும் மும்பையில் 36 தொகுதிகள் உள்ளன. வழக்கமாக மும்பையில் காங்கிரஸ் அதிக தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் குறைவான தொகுதிகளிலும் போட்டியிடும். ஆனால், இந்த தடவை மும்பையில் உள்ள தொகுதிகளிலும் சரிபாதியாக, அதாவது 18 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் சரத்பவாரை வலியுறுத்தினர்.

மராட்டிய சட்டசபையை பொறுத்தவரை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து 15 ஆண்டு காலம் கூட்டணி ஆட்சி செய்து வந்த நிலையில், கடந்த 2014 தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பா.ஜனதா, சிவசேனாவிடம் பறி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய சட்டசபை தேர்தல்: மும்பையில் 50 சதவீத வாக்குப்பதிவு வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை
மராட்டிய சட்டசபை தேர்தலில் மும்பையில் உள்ள 36 தொகுதிகளில் 50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
2. மராட்டிய சட்டசபை தேர்தல் வாக்களிக்க படையெடுத்த சினிமா நட்சத்திரங்கள் உடல் நலக்குறைவால் அமிதாப் பச்சன் ஓட்டுப்போடவில்லை
மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி மும்பையில் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் ஆர்வமாக வாக்களித்தனர். உடல் நலக்குறைவால் அமிதாப் பச்சன் ஓட்டுப்போடவில்லை.
3. மராட்டிய சட்டசபை தேர்தலில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்
மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள். நேற்று பிரதமர் மோடி, ராகுல்காந்தி தீவிர ஓட்டுவேட்டையில் ஈடுபட்டனர்.
4. மராட்டிய சட்டசபை தேர்தல் பிரதமர் மோடி 4 நாட்கள் பிரசாரம் 9 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்
சட்டசபை தேர்தலையொட்டி 4 நாட்கள் பிரசாரத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி 9 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
5. மராட்டிய சட்டசபை தேர்தலில் 3,239 பேர் போட்டி; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மராட்டிய சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 3,239 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை