வீடுகள் கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் புதிய திட்டம் : முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்


வீடுகள் கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் புதிய திட்டம் :  முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Jun 2019 12:17 AM GMT (Updated: 14 Jun 2019 12:17 AM GMT)

இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகத்தில் வீடுகள் கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் புதிய திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

பெங்களூரு, 

இந்தியாவில் முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் வீடுகள் கட்டவும், லே-அவுட்டுகள் அமைக்கவும், நிலத்தை விற்பனை செய்யவும் ஆன்லைனில் அனுமதி வழங்கும் புதிய திட்டத்தை கர்நாடக நகர வளர்ச்சித்துறை கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய திட்டத்தை பெங்களூரு விதானசவுதாவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

பொதுவாக‌ வீடுக‌ள் க‌ட்டுவ‌த‌ற்கும், லே-அவுட்டுக‌ளை அமைக்கவும், நில‌ங்க‌ளை விற்ப‌னை செய்யவும் ப‌ல்வேறு பிர‌ச்சினைக‌ளை ம‌க்க‌ள் ச‌ந்தித்து வ‌ருகின்றன‌ர். இதுபற்றி எனது கவனத்திற்கு வந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இதுபோன்று அனுமதி பெறுவதில் முறைகேடுகள் ந‌ட‌ப்ப‌தாக‌வும் புகார்க‌ள் வ‌ந்துள்ள‌ன‌. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக வீடுக‌ள் க‌ட்டுவ‌த‌ற்கும், லே-அவுட்டுக‌ளை அமைக்கவும், நில‌ங்க‌ளை விற்ப‌னை செய்யவும் யாருடைய‌ த‌லையீடும் இல்லாம‌ல் ஆன்லைனில் அனும‌தி பெறும் வ‌கையில் புதிய திட்டத்தை நகர வளர்ச்சித்துறை கொண்டு வந்துள்ளது.

இதற்காக புதிய இணையத‌ள சேவை நகர வளர்ச்சித்துறையால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் மூல‌ம் வீடுகள் கட்டவும், புதிதாக லே-அவுட்டுகள் அமைக்கவும், நிலங்களை விற்பனை செய்யவும் ம‌க்க‌ள் எளிதாக‌ அனும‌தி பெற‌ முடியும். இத‌ன்மூல‌ம் முறைகேடுக‌ள் ந‌டை பெறாமல் த‌டுக்க‌ முடியும். இந்த திட்டம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். மக்களின் நேரம் மிச்சப்படும்.

இந்தியாவில் முதல் முறையாக இந்த‌ திட்டம் கர்நாடகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நமது மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன் உதாரணமாக விள‌ங்குகிற‌து. எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் மக்களுக்காக சேவை செய்ய‌ வேண்டும் என்ற‌ நோக்கில் இந்த‌ திட்டத்தை நகர வளர்ச்சித்துறை தொட‌ங்கியுள்ள‌து. இது போன்ற‌ ம‌க்க‌ள் ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளை செய‌ல்படுத்துவ‌தில் கூட்ட‌ணி அர‌சு சிற‌ந்து விள‌ங்குகிற‌து. மக்களுக்கு உதவும் வகையில் இன்னும் ஏராளமான திட்டங்களை கூட்டணி அரசு தொட‌ர்ந்து செய‌ல்ப‌டுத்தும்.

மாநில‌த்தில் உள்ள அனைத்து ந‌க‌ர‌ங்க‌ளையும் மேம்ப‌டுத்தவும், அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும்‌ த‌லா ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. பெங்க‌ளூருவில் புற‌ந‌க‌ர் ெர‌யில் சேவை திட்ட‌த்தை தொட‌ங்க திட்ட‌மிட்டுள்ளோம். இந்த திட்டம் குறித்து விரைவில் ம‌த்திய‌ ெர‌யில்வே மந்திரியை ச‌ந்தித்து பேச்சுவார்த்தை ந‌ட‌த்த முடிவு செய்துள்ளேன். பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண வெளிவட்ட சாலைகள் அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார்.

இந்த நிக‌ழ்ச்சியில் நகர வளர்ச்சித்துறை மந்திரி யு.டி.காத‌ர், மாநகராட்சி மேய‌ர் க‌ங்காம்பிகே உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

Next Story