மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை + "||" + Thiruchendur, Dr. Sivanthi Adithanar Students enrollment at the College of Education

திருச்செந்தூர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை

திருச்செந்தூர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., எம்.எட். வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி கடந்த 1995-ம் ஆண்டு முதல் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) படிப்புடன் இயங்கி வருகிறது. இருபாலரும் படிக்கும் இந்த கல்லூரி தேசிய தரமதிப்பீட்டு குழுவின் B+ சான்று பெற்ற நிறுவனம் ஆகும். 2007-ம் ஆண்டு முதல் எம்.எட். வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கல்லூரியில் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) ஆங்கிலம், கணிதம், பொருளியல், உயிரறிவியல் (தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், பிளானட் பயாலஜி, பயோ டெக்னாலஜி), பொருளறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளும், முதுநிலை கல்வியியலும் (எம்.எட்.) கற்றுத் தரப்படுகின்றது.

பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தற்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. திறமை வாய்ந்த பேராசிரியர் குழு, தரமிக்க நூலக வசதி, அறிவியல் உளவியியல், கல்வி நுட்பவியல், கணினி ஆய்வகங்கள், வீடியோ வசதியுடன் கூடிய நுண்ணியல் ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வங்கியில் கல்விக்கடன் பெறும் வசதி உள்ளது. ஆண்டுதோறும் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மாணவர்கள் இடம் பெற்றுள்ள னர். மாணவர்களுக்கு வளாக தேர்வு மூலம் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இருபாலருக்கும் விடுதி வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர் தேர்வுக்கான ‘டெட்’ பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

பி.எட். வகுப்பில் ஆங்கிலம், கணிதம், பொருளியல், உயிரறிவியல், பொருளறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகள், எம்.எட். வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் 04639-242181 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தெரிவித்து உள்ளார்.