பணியிடங்களில் பாதுகாப்பு கேட்டு நெல்லையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


பணியிடங்களில் பாதுகாப்பு கேட்டு நெல்லையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2019 3:30 AM IST (Updated: 14 Jun 2019 7:06 PM IST)
t-max-icont-min-icon

பணியிடங்களில் பாதுகாப்பு கேட்டு நெல்லையில் டாக்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை, 

பணியிடங்களில் பாதுகாப்பு கேட்டு நெல்லையில் டாக்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் 

இந்திய மருத்துவ கழகம் நெல்லை கிளை சார்பில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் டாக்டர் அன்புராஜன் தலைமை தாங்கினார்.

செயலாளர் டாக்டர் சுப்பிரமணியன், நிதி செயலாளர் முகமது இப்ராகிம், தமிழ்நாடு அரசு டாக்டர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பணியிடங்களில் பாதுகாப்பு 

கடந்த 14–ந் தேதி கொல்கத்தாவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு இளம் மருத்துவர், நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், பணியிடங்களில் பணியாற்றும் டாக்டர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.

டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோ‌ஷங்கள் 

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் அசரப் அலி, பயிற்சி மருத்துவ சங்கத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார், டாக்டர்கள் சரவணன், பிரான்சிஸ் ராய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story