மாவட்ட செய்திகள்

பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம், கலெக்டர் தகவல் + "||" + Farmers can apply to Prime Minister's financial assistance program

பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம், கலெக்டர் தகவல்

பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம், கலெக்டர் தகவல்
பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தில் பயன்பெற அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முதல்கட்டமாக 2 எக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை, 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.


இதன் தொடா்ச்சியாக இந்த திட்டம், தற்போது, சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது, எனவே, வருமான வரி செலுத்துபவர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேரலாம்

இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்துடன், ஆதார் அட்டை நகல், சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து பயன்பெறலாம்.

மேலும், வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து வாரிசுதாரா்களும் இந்த திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம். இதுவரை நிலமானது இறந்த தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரா் சம்பந்தப்பட்ட பகுதியின் தாசில்தாரை அணுகி வருகிற 30-ந் தேதிக்குள் உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வாரிசுகளுக்கான பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில் பிரதம மந்திரியின் நிதித் திட்டத்தில் சோ்ந்து உடனடியாக பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, இதுவரை இந்த திட்டத்தில் சேராத அனைத்து விவசாயிகளும் உடனடியாக இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.