நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க நாராயணசாமி டெல்லி சென்றார்
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்–அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்றார்.
புதுச்சேரி,
நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமியும் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் நேற்று புதுவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே மேற்கு வங்க முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, எந்த ஒரு அதிகாரத்தையும் கொண்டிராத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்தவித பலனும் இல்லை என்பதால் பாரதீய ஜனதா அல்லாத மாநிலங்களின் முதல்–அமைச்சர்கள், அந்த கூட்டத்தை புறக்கணிக்க கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதம் முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கும் வந்திருந்தது. அந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நாராயணசாமி, இதுகுறித்து கட்சி தலைமையின் ஆலோசனையின்பேரில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இன்று நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான நிதி தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்த உள்ளார்.