மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் அருகே மின்னல் தாக்கி பெண் சாவு + "||" + The lightning strikes the woman's death

மதுராந்தகம் அருகே மின்னல் தாக்கி பெண் சாவு

மதுராந்தகம் அருகே மின்னல் தாக்கி பெண் சாவு
மதுராந்தகம் அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பெருவேலி கிராமத்தை சேர்ந்தவர் சவுமியா (வயது18). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சசிகலா (27), வைதேகி (24). நேற்று முன்தினம் மாலை இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இதில் மின்னல் தாக்கி சவுமியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சசிகலா, வைதேகி இருவரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சித்தாமூர் போலீசார் சவுமியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். காயம் அடைந்த பெண்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இறந்த சவுமியா பிளஸ்–2 முடித்து கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்
புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
2. வயலில் வேலை செய்தபோது மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை
புதுக்கோட்டை அருகே வயலில் வேலை செய்தபோது, மின்னல் தாக்கி 4 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி
குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
4. துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அச்சக உரிமையாளர் பலி 4 பேர் படுகாயம்
துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்ததில் அச்சக உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
5. அரசு பஸ் மோதி வாலிபர் பலி
அரசு பஸ், வில்சன்வினோவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வில்சன்வினோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.