மன்னார்குடியில் அனுமதியின்றி செயல்பட்ட 8 டாஸ்மாக் பார்களுக்கு ‘சீல்’ வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை
மன்னார்குடியில் அனுமதியின்றி செயல்பட்ட 8 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் இயங்கி வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நேற்று மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசுந்தராதேவி தலைமையில் அதி காரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் உரிய அனுமதியின்றி மன்னார்குடி பந்தலடி பகுதியில் 2 பார்கள், பெரிய கடைத்தெரு பகுதியில் 2 பார்கள், பழைய தஞ்சாவூர் சாலை பகுதியில் ஒரு பார், பஸ் நிலைய பகுதியில் ஒரு பார், மற்றும் மேலவாசல் பகுதியில் ஒரு பார் உள்பட 8 மதுபான பார்கள் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து இந்த 8 டாஸ்மாக் பார்களையும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story