டி.ஜி.பி.யிடம் நேரடியாக பணி இடமாற்றம் கேட்ட 12 போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்


டி.ஜி.பி.யிடம் நேரடியாக பணி இடமாற்றம் கேட்ட 12 போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 15 Jun 2019 5:00 AM IST (Updated: 15 Jun 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

டி.ஜி.பி.யிடம் நேரடியாக பணி இடமாற்றம் கேட்ட 12 போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மும்பை,

மும்பை குற்றப்பிரிவு போலீஸ் இணை கமிஷனராக இருந்த தேவன் பாரதி சமீபத்தில் மாநில பயங்கரவாத தடுப்புப்பிரிவு தலைவர் ஆனார். இந்தநிலையில் மும்பையில் பணியாற்றி வரும் சீனியர் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், உதவி இன்ஸ்பெக்டர் என 12 போலீஸ் அதிகாரிகள் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பணி இடமாற்றம் கேட்டுள்ளனர்.

இதில் அவர்கள் பணி இடமாற்றம் கேட்டு நேரடியாக போலீஸ் டி.ஜி.பி. சுபோத் ஜெய்ஸ்வாலிடம் விண்ணப்பித்து உள்ளனர்.

நடைமுறைப்படி பணி இடமாற்றம் பெற விரும்பும் போலீசார் அவர்கள் பகுதி போலீஸ் கமிஷனர் அல்லது கண்காணிப்பாளரிடமே விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் மூலமாகவே அந்த விண்ணப்பம் டி.ஜி.பி.க்கு செல்ல வேண்டும்.

எனவே பணி இடமாற்றம் கேட்டு நேரடியாக டி.ஜி.பி.யிடம் விண்ணப்பித்த 12 போலீஸ் அதிகாரிகளும் விளக்கம் அளிக்குமாறு மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Next Story