“தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்” கனிமொழி எம்.பி. உறுதி


“தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்” கனிமொழி எம்.பி. உறுதி
x
தினத்தந்தி 16 Jun 2019 4:00 AM IST (Updated: 15 Jun 2019 5:35 PM IST)
t-max-icont-min-icon

“தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்” என்று கனிமொழி எம்.பி. உறுதி அளித்தார்.

தூத்துக்குடி, 

“தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்” என்று கனிமொழி எம்.பி. உறுதி அளித்தார்.

கனிமொழி எம்.பி. 

தூத்துக்குடியில் உள்ள இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் சார்பில் கனிமொழி எம்.பி.யுடன் உரையாடல் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. சங்க தலைவர் ஜான்சன் தலைமை தாங்கினார். செயலாளர் கோடீசுவரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தூத்துக்குடி வளர்ச்சிக்காக... 

இந்த கூட்டத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கிறேன். நான் தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று உறுதி அளிக்கிறேன். தூத்துக்குடி வளர்ச்சிக்காக உங்களுடன் துணை நிற்பேன். தூத்துக்குடியை 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சிறந்த 2–வது மாநகரமாக மாற்றி, அனைத்து தொழில்களிலும் முன்னேற்றமடைய பாடுபடுவேன். விமான நிலையம், ரெயில்வேயில் கூடுதல் ரெயில் சேவை, வ.உ.சி. துறைமுகம் வளர்ச்சி பணி, வேலைவாய்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். தூத்துக்குடி மக்களின் குரலாக, தமிழ்நாட்டின் உணர்வாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, அவரிடம் தூத்துக்குடி நகரின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக 4 கோரிக்கை மனுக்களை இந்திய வர்த்தக தொழிற்சங்க நிர்வாகிகள் வழங்கினர். நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., சங்க துணை தலைவர் எட்வின் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story