திருச்செந்தூர் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
திருச்செந்தூர் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரசு பஸ் டிரைவர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் தண்டபாணி (வயது 42). இவர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
அவருடைய குடும்பத்தினர் வெளியூர் சென்று இருந்தனர். நேற்று முன்தினம் பகலில் தண்டபாணி குமாரபுரம் சென்று விட்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
10 பவுன் கொள்ளை
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசில் தண்டபாணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் பகுதியில் ஏற்கனவே 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story