மின்தடை குறித்து செல்ேபான் மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டம்; புதிய செயலி அறிமுகம்


மின்தடை குறித்து செல்ேபான் மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டம்; புதிய செயலி அறிமுகம்
x
தினத்தந்தி 16 Jun 2019 4:30 AM IST (Updated: 16 Jun 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

மின்தடை குறித்த விவரத்தை செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கும் புதிய செயலியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.

சிவகங்கை,

தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம் வீடுகளில் பயன்படுத்தும் மின்கட்டண விவரத்தை 2 மாதத்திற்கு ஒருமுறை மின்ஊழியர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து கணக்கெடுத்து ஒரு அட்டையில் மின்கட்டண விவரத்தை குறித்து கொடுத்து வந்தனர்.

தற்போது கூடுதலாக மின் நுகர்வோர்களின் செல்போன் எண்ணிற்கு தற்போது மின்கட்டண விவரத்தை குறுந்தகவலாக அனுப்பி வருகின்றனர்.

அதில் மின் இணைப்பு எண் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவு மற்றும் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும். இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் தற்போது மின்வாரியம் மின்நுகர்வோர்களுக்கு பயன்படும் வகையில் மின்தடை குறித்த விவரத்தையும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

நேற்று சிவகங்கை நகரில் துைண மின்நிலைய பராமரிப்பு பணிகளால் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தகவலை முதல் முறையாக மின் நுகா்வோர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு மின்தடை குறித்த விவரம் பற்றிய தகவல் குறுந்தகவலாக அனுப்பப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் துைண மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யும் ேபாது ஏற்படும் மின் தடை குறித்த விவரத்தை அந்தந்த பகுதி மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் மின்வாரியம் புதிய செயலியை உருவாக்கியுள்ளது.

அந்த செயலி மூலம் தற்ேபாது சிவகங்கை நகரில் மின்தடை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களி்ல் இதை முதல் நாளே தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Next Story