இந்தி திணிப்பை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


இந்தி திணிப்பை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 16 Jun 2019 4:15 AM IST (Updated: 16 Jun 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

இந்தி திணிப்பை கண்டித்து நாகையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நெப்போலியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புபேஸ் குப்தா முன்னிலை வகித்தார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமன் கலந்து கொண்டு பேசினார். மாநில உரிமை, சமூக நீதிக்கு எதிராகவும், இந்தி மொழி திணிப்பை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் ஓ.எஸ். இப்ராகிம் மற்றும் திராவிடர் கழகத்தினர் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story