அதியமான்கோட்டை அருகே பட்டப்பகலில் துணிகரம்: தாசில்தார் வீட்டில் நகை, பணம் திருட்டு


அதியமான்கோட்டை அருகே பட்டப்பகலில் துணிகரம்: தாசில்தார் வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 Jun 2019 3:45 AM IST (Updated: 16 Jun 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

அதியமான்கோட்டை அருகே பட்டப்பகலில் தாசில்தார் வீட்டில் புகுந்து நகை, பணத்தை மர்ம கும்பல் திருடிச்சென்றது.

நல்லம்பள்ளி, 

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ளது ஒட்டப்பட்டி சத்யாநகர். இந்த நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 41). இவர் பாப்பிரெட்டிப்பட்டியி்ல் தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் சுகுமார் பணிக்கு சென்று விட்டார். மனைவி நந்தினீஸ்வரி, சுகுமாரின் பெற்றோர் ஆகியோர் வீ்ட்டை பூட்டி விட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள உறவினர் இல்ல திருமணத்தில் கலந்து கொள்ள சென்று விட்டனர்.

மதியம் மர்ம கும்பல் ஒன்று சுகுமார் வீட்டுக்கு வந்துள்ளது. மாடி வழியாக இறங்கி வீட்டின் முன்பக்க கதவின் பூட்ைட உடைத்து உள்ளே புகுந்துள்ளது. பின்னர் வீட்டு பீரோவில் இருந்த 2½ பவுன் நகை, ரூ.2 லட்சம் ஆகியவற்றை திருடி சென்றது.

வீடு திறந்து கிடந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் தாசில்தார் சுகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு வந்தார். பின்னர் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கைரேகை நிபுணர்கள் வந்து ரேகையை பதிவு செய்தனர். துப்பு துலக்க மோப்ப நாய் வரவழைக்கப்ட்டது.

பட்டப்பகலில் துணிகரமான முறையில் கைவரிசையை காட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். தாசில்தார் வீட்டில் நகை, பணம் திருட்டு நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story