முதியோர்களை பாதுகாக்காமல் விடுவது கொடுமையானது; மாவட்ட நீதிபதி சோபனாதேவி வேதனை
முதியோர்களை பாதுகாக்காமல் விடுவது கொடுமையானது என்று மாவட்ட நீதிபதி சோபனா தேவி வேதனை தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவை காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஹெல்பேஜ் இந்தியா நிறுவனம் சார்பில் முதியோர் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மேம்பட்ட செல்போன் செயலி தொடக்கம், கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தேசிய சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனா தேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதியோர்களை பாதுகாப்பது தொடர்பான விஷயங்களை பேசுவது மிகவும் மனவேதனை தருகிறது. முன்பெல்லாம் முதியோர்களை பாதுகாப்பது என்பது வீட்டில் உள்ளவர்களின் கடமையாக இருந்தது. தற்போது அப்படி இல்லை. 35 சதவீதம் பேர் முதியோர்களை பாதுகாக்க முன்வருவது இல்லை என்று கூறப்படுவது மிகவும் கொடுமையான விஷயம்.
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் மூலம் முதியோர்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறோம். முதியோர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மக்களுக்கு அனைத்து விதமான சட்ட உதவிகளும் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் மூலம் இலவசமாக செய்யப்படுகிறது.
முதியோர்கள் வழக்குகளை எதிர்கொள்ளுதல், சொத்துகளை தங்கள் வாரிசுகள், குழந்தைகள் பேரில் எழுதி வைத்தல் போன்றவற்றுக்கு சட்ட உதவிகள் தேவை என்றால் அவர்கள் எங்களை அணுகலாம். முதியோர்களுக்கு எந்த விதமான உதவிகள் தேவை என்றாலும் தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தை அணுகலாம். அவர்களுக்கு உதவி செய்ய ஆணையம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் புதுவை அரசு பான்கேர் செயலாளர் பத்மநாபன், சமூக நலத்துறை இணை இயக்குனர் சரோஜினி, போலீஸ் சூப்பிரண்டு கொண்டா வெங்கடேஸ்வர ராவ், புதுவை பல்கலைக்கழக சமூக துறையின் தலைவர் நளினி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தயாநிதி வரவேற்று பேசினார். முடிவில் வெங்கடேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முதியோரை பாதுகாக்க உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

Related Tags :
Next Story