சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டலுக்குள் பட்டாசு கொளுத்தி போட்டவருக்கு வலைவீச்சு


சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டலுக்குள் பட்டாசு கொளுத்தி போட்டவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Jun 2019 4:15 AM IST (Updated: 16 Jun 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டலுக்குள் பட்டாசு கொளுத்தி போட்டவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை பகுதியில் குடும்பத்துடன் தங்கி அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தவர் ஜெயந்தி. இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம். நேற்று முன்தினம் இரவு கீழக்கரணை பகுதியை சேர்ந்த மணிகண்டன்(28), ஜெயந்தியின் ஓட்டலுக்கு சென்று பிடித்த உணவுகளை சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்து விட்டார்.

இதனால் ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு செய்த மணிகண்டன் பட்டாசை கொளுத்தி ஓட்டலுக்குள் போட்டார்.

இதனால் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர். இதனால் ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஜெயந்தி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிகண்டன் மீது மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story