எஸ்.வலையபட்டி கிராமத்தில் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத்தலைவர் விசாரணை
திருமங்கலம் அருகே எஸ்.வலையபட்டி கிராமத்தில் நடந்த வன்முறை குறித்து தேசிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணைய துணைத்தலைவர் நேரில் விசாரணை நடத்தினார்.
பேரையூர்,
திருமங்கலம் அருகே உள்ள எஸ்.வலையபட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பினரை தாக்கி, அவர்களது வீடு, வாகனங்களை மற்றொரு தரப்பினர் சூறையாடினர். மேலும் ஒரு தரப்பை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் வன்முறை சம்பவம் குறித்தும், அங்கன்வாடி ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த தேசிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் எஸ்.வலையப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டறிந்தார். அப்போது அவர்கள் தாக்குதல் குறித்து அவரிடம் தெரிவித்தனர். பின்னர் தாக்குதலில் காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். தாக்குதலில் சேதமடைந்த வீடுகளையும் பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஊழியர்களிடம் இடமாற்றம் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக தாக்குதலில் காயமடைந்து மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களிடமும் விசாரித்தார்.
விசாரணைக்கு பின்னர் தேசிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறியதாவது:-
எஸ்.வலையபட்டி கிராமத்தில் கடந்த 9-ந்தேதி கலவரம் நடந்தது. ஏற்கனவே அந்த கிராமத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அமைதிக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒருதரப்பு மக்கள் கோவிலில் சாமி கும்பிடக்கூடாது, ஊருணியில் குளிக்கக்கூடாது போன்ற தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். பொது இடங்களில் தடை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முழு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளனர். நாளை (திங்கட்கிழமை) அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்ல வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கூறியுள்ளோம். வீடுகள் சேதம், தண்ணீர் குழாய் உடைப்பு, இருசக்கர வாகன சேதம் ஆகியவை குறித்து கணக்கெடுத்து நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய மற்றவர்களையும் தனிப்படை அமைத்து கைது செய்ய வேண்டும். இனிமேல் அந்த கிராமத்தில் இருதரப்பு மோதல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அமைதி நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு அந்த ஊரில் தான் பணி கொடுக்கப்பட்டுள்ளது. பிரச்சினை இருக்கும் நேரத்தில் கூடுதல் பணி கொடுக்கப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோவிலில் சாமி கும்பிட அனைவருக்கும் உரிமை உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விசாரணையின்போது மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) சாந்தகுமார், தாசில்தார் தனலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story