பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் இன்று மாற்றம், தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் இன்று மாற்றம், தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2019 4:45 AM IST (Updated: 16 Jun 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூர்-விழுப்புரத்துக்குட்பட்ட கூடுவாஞ்சேரி-வண்டலூர் இடையேயும், சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையங்கள் இடையேயும் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* இன்று காலை 9.50 சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் சர்க்குலர் ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 8.25 மணிக்கு புறப்பட்டு மேல்மருவத்தூர் செல்லும் மின்சார ரெயில், காலை 11.30 மணிக்கு மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரம் செல்லும் ரெயில், பிற்பகல் 1.55 மணிக்கு விழுப்புரம்-மேல்மருவத்தூர் ரெயில், மேல்மருவத்தூரில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரெயில், அதிகாலை 5.20 மணிக்கு விழுப்புரம்-தாம்பரம் செல்லும் ரெயில், மாலை 6.10 மணிக்கு தாம்பரம்-விழுப்புரம் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

* இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரை சென்னை கடற்கரை- வேளச்சேரி செல்லும் மின்சார ரெயில்கள், காலை 8.10 மணி முதல் பிற்பகல் 2.10 மணி வரை வேளச்சேரி- கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் என 19 இணைப்பு மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* புதுச்சேரியில் இருந்து இன்று புறப்படும் பயணிகள் ரெயில் மேல்மருவத்தூர்- எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* இன்று பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக செல்லும்.

* சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி இன்று காலை 10.15, 11, பிற்பகல் 12, 12.30, 1.15, 1.45, 2.15, 2.45, 3.40, மாலை 4.10, 4.50, 5.20, 5.40, 6.10, 6.30, 6.50, இரவு 7.40, 8.10, 8.52 மணிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளும், பிற்பகல் 1.30 மணிக்கு கடற்கரையில் இருந்து திருமால்பூருக்கு செல்லும் ரெயிலும் தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.

* செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி இன்று காலை 11.50, பிற்பகல் 12.15, 1, 1.50, 2.25, 3.15, 3.40, மாலை 4.35, 5, 5.30, 6.05, 6.25, 6.40, இரவு 7.25, 7.45, 8.50, 9.10, 10.15, 11.10 மணிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளும், திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 11.30, மாலை 6.25 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்களும் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மட்டும் இயக்கப்படும்.

மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், செங்கல்பட்டில் இருந்து திருமால்பூருக்கு இன்று பிற்பகல் 2.50, மாலை 4.50 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து காஞ்சீபுரத்துக்கு இரவு 8.45 மணிக்கும், மறுமார்க்கமாக திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 10.25, மாலை 5.10 மற்றும் இரவு 9 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story