சீமைக்கருவேல மரங்களை அகற்ற காலக்கெடு வழங்கக்கோரி வழக்கு; குழு அமைத்து ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சீமைக்கருவேல மரங்களை அகற்ற காலக்கெடு வழங்கக்கோரிய வழக்கில் குழு அமைத்து ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சிவகங்கையை சேர்ந்த முத்துராமன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம் வி.புதுக்குளம் கிராமத்தில் பெரிய கோட்டை கண்மாய் பகுதியில் உள்ள புறம்போக்கில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற ரூ.9 லட்சத்து 16 ஆயிரத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு டெண்டர் எடுத்தேன். 2 வருடத்துக்கும் மேலாக சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதற்கான பணி உத்தரவு வழங்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் 11-ந்தேதி வருவாய் கோட்ட அதிகாரி பிறப்பித்த உத்தரவில், 12.6.2019 வரையிலான 6 மாத காலத்திற்குள் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றலாம் என தெரிவித்து இருந்தார். அதன்படி பணிகளை மேற்கொண்டோம். ஆனால் பிப்ரவரி மாதம் 8-ந்தேதி முதல் மே மாதம் 18-ந்தேதி வரை மொத்தம் 99 நாட்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் கோட்டாட்சியர் அளித்த காலக்கெடு தற்போது நிறைவடைய இருக்கிறது. எனவே சீமைக்கருவேல மரங்களை அகற்ற காலக்கெடுவை நீட்டிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
சம்பந்தப்பட்ட இடத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்டுவது குறித்து ஆய்வு செய்ய வனத்துறை அதிகாரிகள் மற்றும் மனுதாரர் தரப்பினர் அடங்கிய 3 பேர் குழுவை சிவகங்கை கலெக்டர் உடனடியாக அமைக்க வேண்டும். மொத்தம் எவ்வளவு பகுதிகள் உள்ளன? அதில், எவ்வளவு பகுதி மனுதாரருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது? இந்த பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளதா? அங்கு மரங்கள் உள்ளதா? டெண்டர் வழங்கப்பட்ட பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் வெட்டி அகற்றியது போக மீதி எவ்வளவு பரப்பளவில் மரங்கள் ெவட்டப்படாமல் உள்ளன? இனி வெட்டி அகற்ற வேண்டிய சீமைக்கருவேல மரங்களின் மதிப்பு எவ்வளவு? என்பது குறித்து ஆய்வு ெசய்து கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை சீலிடப்பட்ட கவரில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story