318 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 67 லட்சம் உதவித்தொகை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
318 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 67 லட்சம் உதவித்தொகையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
கரூர்,
கரூரில் நேற்று முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, 318 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 67 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகையை வழங்கினார்.
தொடர்ந்து வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, தீயணைப்புத்துறை, ஊரக நலப்பணி, குடும்ப நலத்துறை, காவல்துறையை சேர்ந்த 10 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ஸ்கூட்டர், பார்வை குறைபாடுள்ள 2 மாணவர்களுக்கு எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் கருவியும், பார்வையற்ற 2 பயனாளிகளுக்கு நவீன மடக்கு குச்சி என 6 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பிலான உதவி உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் கீதா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வசுரபி, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி, லியாகத், வட்டாட்சியர்கள் ஈஸ்வரன், சுரேஷ்குமார், செந்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலு வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story