நாகர்கோவிலில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
சமூக நீதிக்கு எதிராக இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிப்பதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு திராவிட கழக மாவட்ட செயலாளர் கிருஷ்ணேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மணி, பொதுக்குழு உறுப்பினர் தயாளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மண்டல செயலாளர் வெற்றிவேந்தன் தொடக்க உரையாற்றினார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் வெற்றிவேல், மகாராஜன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பகலவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அகமது உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story