சிவசேனா நாடாளுமன்ற குழு தலைவராக விநாயக் ராவத் நியமனம்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா 18 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
மும்பை,
சிவசேனா வெளியிட்ட தகவலில், கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக ரத்னகிரி- சிந்துதுர்க் தொகுதியில் இருந்து தேர்வான விநாயக் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கு கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கடிதம் மூலமாக தகவல் அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
65 வயதான எம்.பி. விநாயக் ராவத் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக கொங்கன் மண்டலத்தில் உள்ள ரத்னகிரி- சிந்துதுர்க் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானவர் ஆவார்.
முன்னதாக மும்பை, வில்லே பார்லே சட்டமன்ற தொகுதியில் 1999 முதல் 2004-ம் ஆண்டுவரை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். மேலும் எம்.எல்.சி.யாகவும் பதவி வகித்துள்ளார்.
Related Tags :
Next Story