திருவள்ளூர் அருகே ஆட்டோ – மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


திருவள்ளூர் அருகே ஆட்டோ – மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 17 Jun 2019 4:00 AM IST (Updated: 16 Jun 2019 11:53 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே ஆட்டோ– மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பாரதி நகரை சேர்ந்தவர் பாபு பீட்டர். இவரது மகன் ஜார்ஜ் ஆண்ட்ரூஸ் (வயது 26). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜார்ஜ் ஆண்ட்ரூஸ் வழக்கம்போல வேலையை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அவர் வேப்பம்பட்டு ஈஸ்வரன் நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னால் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story