தண்டவாள பராமரிப்பு பணியால் விழுப்புரம்- புதுச்சேரி இடையே பயணிகள் ரெயில்கள் ரத்து
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி இடையே பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
விழுப்புரம்,
விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் நேற்று காலை தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் 3, 4-வது நடைமேடையில் இருந்து புதுச்சேரி மார்க்கம் செல்லும் பாதையில் மிகவும் பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு சரிசெய்யும் பணி நடந்தது.
இந்த பணியில் ரெயில்வே ஊழியர்கள் 25-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பழைய தண்டவாளங்களை அகற்றி அதில் ஏற்கனவே கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்தினர்.
அதன் பிறகு புதியதாக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. தொடர்ந்து, ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் புதிய தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணிகள் மாலை 6 மணி வரை நடந்தது.
இந்த பணிகள் காரணமாக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பயணிகள் ரெயில்களின் சேவை நேற்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் புதுச்சேரியில் இருந்து திருப்பதி, சென்னைக்கு இயக்கப்பட வேண்டிய பயணிகள் ரெயில்கள் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்பட்டன.

Related Tags :
Next Story