பின்னலாடை நிறுவனங்களில் பாலியல் தொல்லை புகாரை விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும்; பனியன் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
திருப்பூரில் உள்ளபின்னலாடைநிறுவனங்களில் பாலியல் தொல்லை குறித்த புகாரை விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என்று பனியன் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்,
பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் துரைசாமி, ம.தி.மு.க.வின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சிவபாலன், பஞ்சாலை சங்க மாவட்ட செயலாளர் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-
அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் சட்டப்படியான 8 மணிநேர வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும். தொடர்ச்சியான விலைவாசி மற்றும் வீட்டு வாடகை உயர்வால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதை சமாளிக்க ஷிப்ட்டுக்கு ஊதியம் ரூ.1000 என்பதை நிர்ணயம் செய்து குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரத்தை வழங்க வேண்டும்.
பெண் தொழிலாளர்கள் வேலை செய்கிற பனியன் நிறுவனங்களில் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டி வைக்கவும், அதை விசாரிக்க சட்டப்படியான கமிட்டி அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து பனியன் நிறுவனங்களிலும் புகார் பெட்டியும், கமிட்டியும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு இனிவரும் காலங்களிலாவது பனியன் தொழில் மற்றும் தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்க ஜி.எஸ்.டி. வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் வடிவேல், காசிராஜ், ரமேஷ்குமார், சேகர், பெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story