கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகள் ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்; மடத்துக்குளம் அருகே பரபரப்பு
கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு மடத்துக்குளம் அருகே கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மடத்துக்குளம்,
மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி ஊராட்சிக்கு உட்பட்ட நரசிங்காபுரம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பழனி-உடுமலை சாலையின் அருகில் உள்ள ஒதுக்குபுறமாக உள்ள பகுதிகளில் ஏற்கனவே இரவு நேரத்தில் உடைந்த கண்ணாடி துண்டுகள், பீங்கான் மற்றும் கட்டிடக்கழிவுகள் போன்ற பல்வேறு கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு கேரளாவில் இருந்து வந்த லாரி ஒன்று உடுமலை -பழனி சாலையில் உள்ள ஓரத்தில் ஒதுக்குபுறமாக சென்றது. ஆனால் அந்த வழியே ஜல்லிகற்கள் உடைக்கும் கிரஷர் ஒன்று இயங்கி வருவதால், அந்த வழியே ஜல்லிகற்கள் மற்றும் சிமெண்டு, மணல் ஏற்றிக்கொண்டு செல்லும் லாரி என நினைத்து விட்டுவிட்டனர்.
ஆனால் சிறிது நேரத்தில் கேரளாவில் இருந்து வந்த லாரி மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தது. மேலும் லாரி நின்ற இடத்தில்,துர்நாற்றம் அதிகமாக வீசியது. இதனால் அப்பகுதியில்உள்ள பொதுமக்கள் சிலர் ஓடி சென்று அங்குபார்த்த போது, மூடை மூடையாக இறந்து போன கோழிகளை, பழைய சாக்கு பைகளில் கட்டி, லாரியில் இருந்து தூக்கி வீசிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மேலும் சிலரை திரட்டிக்கொண்டு அங்கு சென்றனர். பின்னர் லாரி மற்றும் அதனை ஓட்டி வந்த ஓட்டுனர், உதவியாளர் ஆகியோரை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று அதிகாலையில் மடத்துக்குளம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றியவட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணைவட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், சதீஷ்குமார்,மைவாடி ஊராட்சி செயலாளர் கண்மணி ஆகியோர் சம்ப இடத்திற்கு வந்தனர். பின்னர் அதிகாரிகள், கேரளாவில் உள்ளலாரி உரிமையாளர்களுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது லாரி உரிமையாளர்களிடம் நரசிங்காபுரம் பொதுமக்களின் சார்பில் சக்திவேல் என்பவர் கூறியதாவது:-
ஏற்கனவே கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரும் பல்வேறு கழிவுகளை கடந்த சில வருடங்களாக தமிழக எல்லை பகுதிகளான பொள்ளாச்சி, உடுமலை போன்ற இடங்களில் கொட்டி வருகிறீர்கள். தற்போது மடத்துக்குளம் பகுதியிலும் பல்வேறு கழிவுப்பொருட்களை கொட்டுவதல்லாமல், இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோயை உருவாக்கும் விதமாக இறந்து போன நூற்றுக்கணக்கான கோழிக்கழிவுகளை கொட்டுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே கேரளாவில் இருந்து லாரிகள் மூலமாக கொண்டு வரப்பட்டு, தற்போது மடத்துக்குளம் நரசிங்காபுரம் பகுதியில் கொட்டப்பட்ட கோழிக்கழிவுகளையும், ஏற்கனவே இதே இடத்தில் கொட்டப்பட்டுள்ள மற்ற அனைத்து கழிவுகளையும், இப்பொழுதே தங்களது சொந்த செலவில், இந்த இடத்தை எந்திரம் கொண்டு சுத்தப்படுத்தி தரவேண்டும். இல்லையென்றால் தங்களது கோழிக்கழிவுகள் மற்றும் தேவையற்ற கழிவுகள் அடங்கிய லாரிகள் பறிமுதல் செய்து பொதுமக்களால் மடத்துக்குளம் போலீசில் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் இதற்கு சம்மதித்து உடனடியாக அவர்கள் செலவில் பொதுமக்கள் முன்னிலையில் டிராக்டர் வைத்து சுத்தம் செய்யப்பட்டது.
பின்னர் லாரி அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து கொண்டு வந்த கோழிக்கழிவுகளை மடத்துக்குளம் பகுதியில் உள்ள நரசிங்காபுரம் பொதுமக்கள், தங்களது ஒற்றுமையால் கேரளாவுக்கே திருப்பி அனுப்பிய நிகழ்ச்சி இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story