தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை: அருப்புக்கோட்டையில் பெண்கள் சாலை மறியல்


தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை: அருப்புக்கோட்டையில் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Jun 2019 4:15 AM IST (Updated: 17 Jun 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் காலி குடங்களுடன் பெண்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகரில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. ஒரு மாதமாகியும் சில இடங்களில் தண்ணீர் வினியோகிக்கப்படாத நிலை நீடிக்கிறது.
இதனால் பெண்கள் ஆவேசமடைந்து சாலை மறியலில் ஈடுபடும் நிலை உள்ளது.

அருப்புக்கோட்டை நகராட்சி 8 மற்றும் 11-வது வார்டு அமைந்துள்ள சொக்கலிங்காபுரம் பகுதியில் 1 மாதமாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கவில்லை.

இதனால் கடும்பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். அனைவரும் திருச்சுழி சாலையில் சிவன்கோவில் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து போலீசாரும் நகராட்சி அலுவலர்களும் அங்கு வந்தனர். குடிநீர் வழங்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்கள். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story