தெலுங்கானாவில் இருந்து 2,560 டன் ரேஷன் அரிசி ரெயில் மூலம் நெல்லை வந்தது

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,560 டன் ரேஷன் அரிசி ரெயில் மூலம் நெல்லைக்கு வந்தது. பின்னர் அரிசி மூட்டைகள் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தானிய கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டன.
நெல்லை,
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கான அரிசிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, குடிமை பொருட்கள் வழங்கல் துறையின் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2 ஆயிரத்து 560 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரெயில் மூலம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவில் வந்து இறங்கியது.
இந்த அரிசி மூட்டைகளை அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றி பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள அரசு தானிய கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று அரிசி மூட்டைகளை இறக்க நேரமாகியதால் லாரிகள் புதிய பஸ்நிலையத்தில் இருந்து சாராள் தக்கர் கல்லூரி செல்லும் சாலையில் கிட்டங்கி முன்பு நீண்ட வரிசையில் நின்றன.
Related Tags :
Next Story