நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் பா.ஜ.க.வினர் அமலை செடிகளை அகற்றினர்
நெல்லை தாமிரபரணி ஆற்றில் தேங்கி கிடந்த அமலை செடிகளை நேற்று பாரதீய ஜனதா கட்சியினர் அகற்றினார்கள்.
நெல்லை,
நெல்லை தாமிரபரணி ஆற்றில் தற்போது தண்ணீர் குறைந்து விட்டது. நெல்லை கொக்கிரகுளத்தில் சுலோசனா முதலியார் பாலத்தின் அருகில் மேலும் ஒரு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆற்றில் ஒரு புறம் மணல் போட்டு தண்ணீர் ஓட்டத்தை தடுத்துள்ளனர். இதனால் அங்கு அமலை செடிகள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளன. தாமிரபரணி ஆற்றில் தைப்பூச மண்டப படித்துறை, ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவில் பகுதிகளில் ஆறு இருப்பதே தெரியாத வண்ணம் ஒரே அமலைசெடிகளாக காட்சி அளிக்கிறது.
இந்த அமலை செடிகளை பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று கார்த்திக் நாராயணன் தலைமையில் அகற்றினார் கள். இந்த பணியை புத்தாத்மானந்தா சரசுவதி சுவாமிகள் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் அந்த பகுதியில் இருந்த அமலை செடிகளை அகற்றினார்கள்.
இதுகுறித்து புத்தாத்மானந்தா சரசுவதி சுவாமிகள் கூறுகையில், “ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். தமிழகத்தில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடம் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நமது தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தி சுகாதாரமான முறையில் வைத்திருக்க வேண்டும். தாமிரபரணியை பாதுகாப்பது நமது கடமையாகும்“ என்றார்.
Related Tags :
Next Story