திருமண இணையதளம் மூலம் அறிமுகமாகி பெண்ணிடம் செல்போன் அபேஸ் செய்தவர் கைது


திருமண இணையதளம் மூலம் அறிமுகமாகி பெண்ணிடம் செல்போன் அபேஸ் செய்தவர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2019 4:15 AM IST (Updated: 17 Jun 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

திருமண இணையதளம் மூலம் அறிமுகமாகி பெண்ணிடம் செல்போன் அபேஸ் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

புனேயை சேர்ந்த 41 வயது பெண்ணுக்கு திருமண இணையதளம் மூலம் மும்பை சர்னிரோட்டை சேர்ந்த சிர்கான் (வயது47) என்பவர் அறிமுகமானார். இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு நட்பாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் சிர்கான் எனது தந்தைக்கு பிறந்த நாள் வருவதாகவும், அதில் கலந்து கொள்ள மும்பைக்கு வரும்படியும் அந்த பெண்ணுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் எனது தந்தைக்கு பரிசு வழங்க செல்போன் புதிதாக வாங்கி வரும்படியும், அதற்கான பணத்தை தான் தந்து விடுவதாகவும் தெரிவித்தார்.

இதனை நம்பிய அந்த பெண் விலையுயர்ந்த புதிய செல்போனுடன் மும்பை வந்தார்.

அப்போது சிர்கான் கொலபாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு பெண்ணை அழைத்து சென்றார். அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த போது தனது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது அவசரமாக தந்தையிடம் பேச வேண்டும் என கூறி புதிய செல்போனை தரும்படி பெண்ணிடம் கேட்டார். அந்த பெண்ணும் புதிய செல்போனை அவரிடம் கொடுத்தார்.

செல்போனை வாங்கிய அவர் பேசுவது போல் நடித்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வரவே இல்லை. வெகுநேரமாக காத்து இருந்த பெண்ணுக்கு அதன்பின்னர் தான் சிர்கான் செல்போனுடன் தலைமறைவானது தெரியவந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கொலபா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்னி ரோட்டில் இருந்த சிர்கானை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story