புற்றுநோய் பாதிப்பால் விரக்தி மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு சாவு


புற்றுநோய் பாதிப்பால் விரக்தி மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு சாவு
x
தினத்தந்தி 17 Jun 2019 3:15 AM IST (Updated: 17 Jun 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

புனே அருகே புற்றுநோய் பாதிப்பால் விரக்தி அடைந்த பெண், மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புனே, 

புனே மாவட்டத்தில் உள்ள பன்தரேகாவ் கிராமத்தை சேர்ந்தவர் சுரேகா (வயது30). இவரது மகள் சாக்சி (10). சுரேகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் தனது கணவரை பிரிந்து மகள் சாக்சியுடன் தனியாக வந்து வந்தார். நேற்று முன்தினம் காலை சுரேகாவின் வீடு திறக்கப்படாமல் வெகுநேரமாக பூட்டி கிடந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தி னர் கதவை தட்டி பார்த்த னர். ஆனால் தாய், மகள் இருவரும் கதவை திறக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த னர்.

அப்போது, வீட்டுக்குள் சுரேகா தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். மேலும் சிறுமி சாக்சி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தாள். இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையடுத்து அவர்கள், தாய்-மகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த னர். விசாரணையில், சுரேகா தனது மகளை விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, பின்னர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் நடத்திய சோதனையில், கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், புற்றுநோய் கொடுமையால் மிகுந்த வேதனை அடைந்து வருகிறேன். இதனால் நானும், எனது மகளும் தெய்வத்திடம் செல்கிறோம் என எழுதப்பட்டு இருந்தது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புற்றுநோய் காரணமாக மகளை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story