மேச்சேரி அருகே பஸ்சுக்காக காத்து நின்ற பெண்ணிடம் 5½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
மேச்சேரி அருகே பஸ்சுக்காக காத்து நின்ற பெண்ணிடம் 5½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேச்சேரி,
சேலம் மாவட்டம், மேச்சேரியில் நங்கவள்ளி மெயின்ரோட்டில் சின்ன மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் சேகர். இவருடைய மனைவி சகுந்தலா (வயது 53). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இவர் குள்ளமுடையனூர் காட்டூர் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர் ேநற்று அதிகாலை இவர் மேச்சேரிக்கு திரும்பி வருவதற்காக காட்டூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
தாலிச்சங்கிலி பறிப்பு
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சகுந்தலா தனியாக நிற்பதை நோட்டமிட்டனர். இதையடுத்து அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கொள்ள, மற்றொரு வாலிபர் சகுந்தலா நின்ற இடத்திற்கு வந்தார். மேச்சேரி செல்லும் பஸ் வந்து விட்டதா? என்று சகுந்தலாவிடம் விசாரித்தபடியே அவர் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தாலிச்சங்கிலியை அந்த வாலிபர் பறித்தார்.
பின்னர் அங்கு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அந்த 2 வாலிபர்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சகுந்தலா மேச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து பெண்ணிடம் 5½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story