சேலம் பெரமனூரில் கடைக்குள் வேன் புகுந்ததால் பரபரப்பு


சேலம் பெரமனூரில் கடைக்குள் வேன் புகுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Jun 2019 4:00 AM IST (Updated: 17 Jun 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

சேலம் பெரமனூர் மெயின்ரோடு மேயர்நகர் கிழக்கு தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று மதியம் 1 மணியளவில் அவ்வழியாக வந்த ஆம்னிவேன் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த கடைக்குள் புகுந்தது.

சேலம்,

சேலம் பெரமனூர் மெயின்ரோடு மேயர்நகர் கிழக்கு தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று மதியம் 1 மணியளவில் அவ்வழியாக வந்த ஆம்னிவேன் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த கடைக்குள் புகுந்தது. இதில் கடையின் மேற்கூரை இடிந்து வேன் மீது விழுந்தது. வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. ஆனால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் அங்கு திரண்டனர். பெரமனூர் மெயின்ரோட்டில் இருந்து வளைவில் வேனை வேகமாக திருப்பியபோது, கடைக்குள் வேன் புகுந்ததாக வேன் டிரைவர் அங்கிருந்த கடைக்காரர்களிடம் தெரிவித்தார்.இதுபற்றி அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வேன் டிரைவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அதிவேகமாக வேனை ஓட்டியதால் கடைக்குள் புகுந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ேமலும், சேதமடைந்த கடையின் மேற்கூரையை சீரமைத்து கொடுப்பதாக வேன் டிரைவர், அங்குள்ள கடைக்காரர்களிடம் தெரிவித்தார். இதனால் இரு தரப்பினரை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். சேலத்தில் கடைக்குள் வேன் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story