இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் அதிகாரி வேலை
நேரு யுவகேந்திரா சங்கேதன் (NYKS) மத்திய அரசு அமைப்புகளில் ஒன்றாகும்.
இளைஞர் மேம்பாட்டு நல அமைப்பான இதில் தற்போது உதவி இயக்குனர், மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், உதவியாளர், அக்கவுண்ட் கிளார்க் கம் டைப்பிஸ்ட் , ஸ்டெனோ உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 337 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் உதவி இயக்குனர்-மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மட்டும் 160 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதுநிலை பட்டதாரிகள் உதவி இயக்குனர்-மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பி.இ., முதுநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் ஜூனியர் கம்ப்யூட்டர் புரோகிராமர் பணிக்கும், பட்டதாரிகள் உதவியாளர் மற்றும் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். 10, பிளஸ்-2 படித்தவர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 28 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, தபால் வழியாக விண்ணப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுபற்றிய அறிவிப்பு 30-5-2019-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய விரிவான விவரங்களை http://nyks.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story