கொள்ளேகாலில் இருந்து டி.நரசிப்புராவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 129 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் வியாபாரி சிக்கினார்
கொள்ளேகாலில் இருந்து டி.நரசிப்புராவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 129 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கொள்ளேகால்,
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் இருந்து மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவுக்கு சரக்கு வேனில் மாநில அரசின் சார்பில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் ‘அன்னபாக்ய’ அரிசியை சட்டவிரோதமாக கடத்தி செல்வதாக உணவுத்துறை அதிகாரி நாகராஜப்பாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவருடைய தலைமையிலான அதிகாரிகள், கொள்ளேகால் டவுன் போலீசார் உதவியுடன் டி.நரசிப்புரா சாலையில் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் ‘அன்னபாக்ய’ அரிசி மூட்டைகள் இருந்தன.
இதுதொடர்பாக சரக்கு வேன் டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், இந்த அரிசி கொள்ளேகால் டவுன் நூர்மகாலை சேர்ந்த வியாபாரி மெகபூப் பாஷா என்பவர் மூலமாக ெகாள்ளேகாலில் இருந்து மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
ேமலும் டி.நரசிப்புராவில் இருந்து அந்த அரிசி, கேரளா மற்றும் தமிழ்நாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து உணவுத்துறை அதிகாரிகள் சரக்கு வேனில் இருந்து 129 மூட்டை ‘அன்னபாக்ய’ அரிசியையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்துகொண்டனர்.
இதுகுறித்து கொள்ளேகால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மெகபூப் பாஷாவை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், கொள்ளேகால் அருகே குணஹள்ளி உள்ளிட்ட சில கிராமங்களில் மெகபூப் பாஷா, ‘அன்னபாக்ய’ அரிசியை விலைக்கு வாங்கி அதனை வெளிமாநிலங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
கைதான மெகபூப் பாஷாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
Related Tags :
Next Story