பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக அலோக்குமார் நியமனம் மாநில அரசு அதிரடி உத்தரவு


பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக அலோக்குமார் நியமனம் மாநில அரசு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 18 Jun 2019 3:15 AM IST (Updated: 18 Jun 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 19 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக அலோக் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு,

அதன் விவரம் வருமாறு:-

* பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சுனில் குமார், போலீஸ் ஆள்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பெங்களூரு குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக் குமார், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

* போலீஸ் நிர்வாக பிரிவு (பெங்களூரு) ஐ.ஜி. அம்ரீத் பால், கர்நாடக கிழக்கு மண்டல (தாவணகெரே) ஐ.ஜி.யாக செயல்படுவார்.

* கர்நாடக தெற்கு மண்டல (மைசூரு) போலீஸ் ஐ.ஜி. உமேஷ் குமார், பெங்களூரு மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* பெங்களூரு மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.கே.சிங், போலீஸ் துறை செயலாளராக செயல்படுவார்.

* கர்நாடக கிழக்கு மண்டல (தாவணகெரே) ஐ.ஜி. சவ்மீண்டு முகர்ஜி, பெங்களூருவில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணி செய்ய உள்ளார்.

* கர்நாடக வடக்கு மண்டல (பெலகாவி) போலீஸ் ஐ.ஜி. ராகவேந்திர சுகாஷ், கர்நாடக தெற்கு மண்டல (மைசூரு) ஐ.ஜி.யாக செயல்படுவார்.

* பெங்களூருவில் போலீஸ் மற்றும் தீயணைப்பு பிரிவு டி.ஐ.ஜி.யாக இருந்த ரவிகாந்தே கவுடா, பெங்களூரு குற்றப்பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித் சிங், பெங்களூருவில் ஊர்க்காவல் படை மற்றும் பொது பாதுகாப்பு பிரிவு கமாண்டோவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராம் நிவாஸ் செபட், பெங்களூரு ஊழல் தடுப்புபடை பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* பெங்களூருவில் போலீஸ் நிர்வாக பிரிவு துணை போலீஸ் கமிஷனர் அனுசித், பெங்களூரு ரெயில்வே பிரிவு சூப்பிரண்டாக செயல்படுவார்.

* பெங்களூரு வளர்ச்சி வாரிய கண்காணிப்பு பிரிவு சூப்பிரண்டு ரமேஷ், பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ரவி டி.சன்னன்னவர் பெங்களூருவில் சி.ஐ.டி. பிரிவு சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

* பெங்களூருவில் ரெயில்வே பிரிவு சூப்பிரண்டாக இருந்த பீமாசங்கர், பெங்களூரு வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக செயல்படுவார்.

* பெங்களூருவில் ஊழல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக பணி செய்த ரிஷ்யாந்த், மைசூரு மாவட்ட சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

* கர்நாடக ரிசர்வ் போலீஸ் பிரிவு 4-வது பட்டாலியன் கமாண்டோவாக இருக்கும் முகமது சுஜிதா, கோலார் தங்கவயல் சூப்பிரண்டாக பணி செய்வார்.

* பெங்களூருவில் ஊர்க்காவல் படை மற்றும் பொது பாதுகாப்பு பயிற்சி மைய கமாண்டோ சிவக்குமார், பெங்களூரு புறநகர் மாவட்ட சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

* பணி காத்திருப்பு பட்டியலில் இருந்த விஷ்ணுவர்தன், பெங்களூருவில் நிர்வாக பிரிவு துணை போலீஸ் கமிஷனராக செயல்படுவார்.

* பெங்களூருவில் வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கலா கிருஷ்ணசாமி, பெங்களூரு தடயஅறிவியல் ஆய்வக இயக்குனராக பொறுப்பு ஏற்பார்.

இந்த பணி இடமாற்ற உத்தரவு நேற்று முன்தினம் நள்ளிரவில் கர்நாடக அரசு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story