கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர், அரியலூரில் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள்
கொல்கத்தாவில் டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், அந்த மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்தன.
பெரம்பலூர்,
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதை கண்டித்து கடந்த 11-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாகவும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் கடந்த 14-ந் தேதி முதல் 3 நாட்கள் போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் நேற்று வேலைநிறுத்தம் நடத்தவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதன்படி கொல்கத்தாவில் டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவர்களுக்காக மேற்கு வங்காளத்தில் போராடும் டாக்டர்களுக்கு ஆதரவாக பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணி புரிந்தனர். மேலும் டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் செவிலியர்கள், ஊழியர்கள், பணியாளர்களும் கருப்பு பட்டைஅணிந்து பணிபுரிந்தனர். பெரம்பலூர்- அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குள்ள தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முன்பு டாக்டர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு எதிரானவன்முறை தாக்குதல்களை தடுக்க மத்திய அரசு கடுமையான மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தையும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்துகிறோம் என்ற கோரிக்கை அடங்கிய பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தது. பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story