நாகர்கோவிலில் அழகிகள் பிடிபட்ட விவகாரம்: புரோக்கர் கைது


நாகர்கோவிலில் அழகிகள் பிடிபட்ட விவகாரம்: புரோக்கர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2019 3:45 AM IST (Updated: 18 Jun 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் அழகிகள் பிடிபட்ட விவகாரத்தில் விபசார புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் ஆசாரிபள்ளம் அனந்தன்பாலத்தில் இருந்து தம்மத்துக்கோணம் செல்லும் வழியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 அழகிகளை ஆசாரிபள்ளம் போலீசார் பிடித்தனர். மேலும் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த ராஜம் (வயது 52) என்பவரும் போலீசாரிடம் சிக்கினார்.

இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

பல்வேறு வழக்குகள்

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “விபசார புரோக்கராக செயல்பட்டு வந்த ராஜம் மீது வடசேரி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இவை அனைத்துமே விபசார வழக்குகள் ஆகும். இவர் தனியார் விடுதிகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார். இளைஞர்கள் மற்றும் பெரிய பணக்காரர்கள் வரை இங்கு வந்து அழகிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்ட பெண்களின் மனதை மாற்றி அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. பெரும்பாலான அழகிகளை கர்நாடகா மற்றும் சென்னையில் இருந்து அழைத்து வந்திருக்கிறார். தற்போது விபசாரம் நடைபெற்ற விடுதி அதே பகுதியை சேர்ந்த ஜாண்சன் என்பவருக்கு சொந்தமானது. எனவே அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜாண்சன் எங்கு இருக்கிறார்? என்ற விவரம் தெரியவில்லை. எனவே அவரை தேடி வருகிறோம்“ என்றார்.

கைது

இதைத் தொடர்ந்து புரோக்கர் ராஜத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் பிடிபட்ட 2 அழகிகளை தோட்டியோட்டில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Next Story