ஜி.டி.பி. நகர் ரெயில் நிலையத்தில் போலீஸ்காரரை கடித்துவிட்டு தப்பி ஓடிய வாலிபர் சிக்கினார்


ஜி.டி.பி. நகர் ரெயில் நிலையத்தில் போலீஸ்காரரை கடித்துவிட்டு தப்பி ஓடிய வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 18 Jun 2019 3:30 AM IST (Updated: 18 Jun 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஜி.டி.பி. நகர் ரெயில்நிலையத்தில் போலீஸ்காரரை தாக்கி, கடித்துவிட்டு தப்பிஓடிய வாலிபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

மும்பை, 

மும்பை ஜி.டி.பி. நகர் ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று நள்ளிரவு ஓம்பிரகாஷ்(வயது27) என்ற ரெயில்வே போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். இதில், நள்ளிரவு 12 மணியளவில் 2-வது பிளாட்பாரத்தில் உள்ள கழிவறை முன் வாலிபர் ஒருவர் போதையில் விழுந்து கிடந்தார். இதை கவனித்த போலீஸ்காரர் வாலிபரை எழுப்பிவிட்டு அங்கு இருந்து செல்லுமாறு கூறினார்.

இதனால் எரிச்சலடைந்த அவர் போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீஸ்காரர் அந்த இடத்துக்கு உடனடியாக வருமாறு மேலும் ஒரு போலீஸ்காரருக்கு தகவல் கொடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் போலீஸ்காரரை சரமாரியாக தாக்கினார். மேலும் அந்த வழியாக வந்த ரெயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்றார். இந்தநிலையில் அங்கு மற்றொரு போலீஸ்காரர் ஓடிவந்தார். இதை கவனித்த அந்த வாலிபர் ஓம்பிரகாசை கடித்துவிட்டு அங்கு இருந்து தப்பிஓடினார். எனினும் ஓம்பிரகாசும், மற்றொரு போலீஸ்காரரும் அந்த வாலிபரை துரத்தி பிடித்தனர்.

விசாரணையில், அவர் மான்கூர்டை சேர்ந்த முருகேஷ்(28) என்பது தொியவந்தது. முருகேசை கைது செய்த ரெயில்வே போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story