சென்னை அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் போராட்டம்
சென்னை அரசு மருத்துவமனைகளில் நேற்று டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவமனையில் நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததையொட்டி, அந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை அந்த நோயாளி உறவினர்கள் தாக்கினர். இதில் அந்த 2 பயிற்சி டாக்டர்களும் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நேற்று காலை 6 மணி முதல் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளான ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகள், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு ரிப்பன் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில இணை செயலாளர் டாக்டர் புலிகேசி தலைமையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைப்போல் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையிலும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மனித சங்கலியில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோதிலும் அங்குள்ள நோயாளிகளுக்கு வழக்கம்போல் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு மற்றும் உள் நோயாளிகளுக்கு டாக்டர்கள் நேற்று சிகிச்சை அளித்தனர்.
நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய முக்கிய அறுவை சிகிச்சைகள் மட்டுமே டாக்டர்கள் மேற்கொண்டனர். மற்ற அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.

Related Tags :
Next Story