வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அமோகம்; விலை குறைவால் வியாபாரிகள் ஏமாற்றம்
வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அமோகமாக உள்ளது. விலை குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகமாக நடைபெற்று வருகிறது.மாவட்டத்தில் சாயல்குடி அருகே வாலிநோக்கம்,திருப்புல்லாணி, தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் முதல் திருப்பாலைக்குடி வரை ஏராளமான உப்பள பாத்திகள் உள்ளன.
இந்நிலையில் ராமநாதபுரம் அருகே பனைக்குளம் சாலையில் நதிப்பாலம்,தேவிபட்டினம் செல்லும் சாலையில் கோப்ேபரிமடத்தில் உள்ள உப்பள பாத்திகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் உப்பு பிரித்தெடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி உப்பள பாத்தியில் வேலை பார்த்து வரும் பெண்கள் கூறியதாவது:-
கோடை காலத்தில் மட்டுமே தான் உப்பு உற்பத்தி செய்ய முடியும். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தொழில் களைகட்டி உள்ளது.உப்பு உற்பத்தி அதிகமாக உள்ளதால் 1 டன் ரூ.1,500-க்கு விலை போன உப்பு ரூ.900-த்திற்கு விலை போகிறது.
உப்பு உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொழிலாளர்களுக்கு சம்பளமும் குறைவாகவே கிடைக்கிறது. மழைகாலத்தில் மட்டுமே உப்புக்கு விலை அதிகமாக கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story