கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொலையில் மேலும் ஒருவர் கைது
சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர உடன் பிறந்த அண்ணனையே தீர்த்துக் கட்டிய கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனா்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே முசுண்டபட்டி-துவரங்குறிச்சி சாலையில் உள்ள கானப்பட்டு சேமக்காப்பவனம் வனப் பகுதி பாலத்தின் கீழே ஒரு ஆண் பிணம் கிடப்பதாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தந்தனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் வினோத்குமார் புழுதிபட்டி போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புழுதிபட்டி ேபாலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து உலகம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை நடத்தினார்.
முதல்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவா் வலசைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விசுக்கன் மகன் முருகையா(வயது 40). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். முருகையாவிற்கு 3 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த பெண்ணை எஸ்.புதூரை சேர்ந்த பிரபு என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து முருகையா மனைவி மணிமேகலையிடம்(36) புழுதிப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கும், முருகையா தம்பி லாரி டிரைவரான பிச்சமணி (34) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக முருகையா தனது மனைவியுடன் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மணிமேகலையின் தூண்டுதலின் பேரில் பிச்சமணி முருகையாவை கடந்த 13-ந்தேதி இரும்பு கம்பியால் தலையில் அடித்தும், கயிறால் கழுத்தை நொித்தும் கொலை செய்தது தெரிய வந்தது. அண்ணனை கொலை செய்த தம்பி பிச்சமணி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த முருகையா மனைவி மணிமேகலை ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். மேலும் கொலையில் தொடர்புடைய உறவினரையும் தேடி வந்தனர்.
இந்தநிைலயில் கொலையில் தொடர்பு உள்ள மற்றொரு நபர் எஸ்.புதூரை சேர்ந்த அழகு மகன் கார்த்திக்(24) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் இறந்த முருகையாவின் மகளை கார்த்திக்கின் அண்ணன் பிரபு என்பவர் காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் கார்த்திக்கின் தாயாரை, முருகையா தாக்கினாராம்.
இதனால் கார்த்திக், முருகையா மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். மேலும் கார்த்திக், பிச்சமணி இருவரும் உறவினர் மற்றும் லாரி டிரைவராக வேலை செய்து வருவதால் நெருங்கிய பழக்கம் உள்ளது. இதையடுத்து முருகையாவை பிச்சமணி, மணிமேகலை, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பிைய கொண்டு தலையில் அடித்தும், கயிறு கொண்டு கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரிய வந்தது.
அதன் பின்பு லாரியில் பிணத்தை தூக்கிச் சென்று பாலத்தின் கீழே போட்டு விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து கார்த்திக்கை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story