கடந்த 7 ஆண்டுகளில், வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட 2½ லட்சம் பேருக்கு சிகிச்சை - கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தகவல்


கடந்த 7 ஆண்டுகளில், வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட 2½ லட்சம் பேருக்கு சிகிச்சை - கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தகவல்
x
தினத்தந்தி 19 Jun 2019 3:45 AM IST (Updated: 19 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 7 ஆண்டுகளில் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்ட 2½ லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.

கோவை,

கோவையில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவை ரோட்டில் நடந்து செல்பவர்களை விரட்டுவதும், சில நேரங்களில் கடிக்கவும் செய்கின்றன. அத்துடன் இரவு நேரங்களில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புபவர்களை ரோட்டில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் வெறிநாய்கள் கடிப்பதால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தெருநாய்களின் தொல்லையில் இருந்து தப்பிக்க வேகமாக செல்லும் போது விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்..

வெறிநாய் கடி பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடப்பட்டு, மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட 2½ லட்சம் பேருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-

கோவை அரசு ஆஸ்பத்திரியில் வெறிநாய் கடி பாதிப்புக்கு 75 முதல் 100 பேர் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாய் கடியால் அதிகளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்யூனுனோ குளோபின் மருந்து கொடுக்கப்படுகிறது. வெறி நாய் கடிக்கு கடந்த 2012 முதல் 2018 வரை 7 ஆண்டுகளில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 672 பேர் உள்நோயாளியாகவும், வெளி நோயாளியாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றனர். சிகிச்சை பலனின்றி 40 பேர் பலியா னார்கள். நாய் கடியால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்காக போதுமான அளவு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.தெருநாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கொல்லக்கூடாது என்று பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் குறிப்பிடப் படடு உள்ளது. இதனால் தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை செய்யப்படுகிறது. இதன்படி கோவை உக்கடத்தில் தெருநாய் கருத்தடை மையத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து வேறு பகுதியில் விடப்படுகிறது.இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிந்து தொல்லை கொடுத்தால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story