புயல் நிவாரணம் வழங்குவதில் குளறுபடி: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


புயல் நிவாரணம் வழங்குவதில் குளறுபடி: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2019 4:30 AM IST (Updated: 19 Jun 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

புயல் நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதியில் முறையாக நிவாரணம் வழங்கவில்லை என போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு புயல் நிவாரணம் வழங்கவில்லை. ஆனால் நிவாரணம் வழங்கி விட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் புயல் நிவாரணம் வழங்குவதில் உள்ள குளறுபடியை கண்டித்து நேற்று திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு மீனவர் நிஜாம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார் ராஜன்பாபுவிடம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:- கஜா புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டபோது நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

எனவே அதிகாரிகள் முறை கேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், நிவாரணத்தை உடனே வழங்க கோரியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Next Story