மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு: விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு: விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 19 Jun 2019 3:00 AM IST (Updated: 19 Jun 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம் என்று பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம் என்று பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிஇருப்பதாவது:-

மறுமதிப்பீடு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இளநிலை பாடப்பிரிவுக்கான தேர்வுகள் அனைத்தும் கடந்த மாதம் 29-ந் தேதி முடிவடைந்தது. விடைத்தாள்கள் திருத்தும் பணி 3 வார காலத்துக்குள் முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரி வாயிலாகவோ அல்லதுwww.msuniv.ac.inஎன்ற இணையதளம் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் செல்போனுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவு அனுப்பப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய விரும்புகிறவர்கள், அதற்குரிய படிவங்களை மேற்கண்ட இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாளை மறுநாள்

மறுமதிப்பீடு செய்ய விரும்புகிறவர்கள் முதலில் விடைத்தாள் நகலைப் பெற்று கொண்ட பின்னர்தான் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியும்.

விடைத்தாள் நகலை இணையதளம் வாயிலாக பெறுவதற்கு உரிய கட்டணத்துடன் படிவம்-ஏ மூலம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 26-ந்ேததி (புதன்கிழமை) ஆகும். விடைத்தாள் நகல்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதன் விவரம் மாணவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதன் பின்னர் மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு செய்ய இணையதளம் வாயிலாக உரிய கட்டணத்துடன் படிவம் பி மூலம் அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 10-ந்தேதி ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story