திருப்பத்தூரில் இணைக்கப்படாத சாலைகளால் போக்குவரத்து இடையூறு
திருப்பத்தூர் நகர் பகுதிகளில் சாலைகள் இணைக்கப்படாததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
திருப்பத்தூர்,
பெரம்பலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் என்.புதூரில் இருந்து தொடங்கி திருப்பத்தூர் நகர் பகுதி வழியாக திருக்கோஷ்டியூர் வரை சாலைகள் மேம்பாட்டு பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில், பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தும் ஜல்லிக்கற்கள் அகற்றப்படாததால் போக்குவரத்திற்கு இடையூறாக கிடக்கி்றது.
நகரின் மையப்பகுதியாக கருதப்படும் நான்கு ரோடு சாலையில், தேரோடும் வீதியை இைணக்கும் பகுதியில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டு அதில் சிறிய பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்றது. இந்த பாலம் அமைக்கப்பட்டு் ஒரு மாதமாகியும் சாலை இணைப்பு பணி நடைபெறவில்லை.
நான்கு ரோடு முக்கிய பிரதான சாலைகள் சந்திப்பு இடமாக திகழ்வதாலும், முன்னறிவிப்பு பலகை இல்லாததாலும் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
முக்கிய கோவில் தலம் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி, பெரிய தபால் நிலையம், எல்.ஐ.சி. அலுவலகம் ஆகியவற்றிக்கு பாலம் அமைக்கும் பணி நிறைவுற்றும் சாலை இணைக்கப்படாததால் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு நகரை சுற்றி செல்லும் நிலை உள்ளது.
இதில் சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சாலையில் செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் ஒரு மாதமாக ஜல்லிக்கற்கள் அப்புறப்படுத்தாமலும், சாலைகள் இணைக்கப்படாமலும் உள்ளதால் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வியாபார பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
எனவே சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஜல்லிக்கற்களை அகற்றி சாலை இணைப்புகளை செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறும், பொது மக்களின் சிரமத்தை தவிர்ப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story