ராமேசுவரத்தில் கடனுக்கு வட்டி செலுத்தாததால் தங்கும் விடுதி உரிமையாளர் கடத்தல்; 3 பேர் கைது


ராமேசுவரத்தில் கடனுக்கு வட்டி செலுத்தாததால் தங்கும் விடுதி உரிமையாளர் கடத்தல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2019 5:00 AM IST (Updated: 19 Jun 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் கடனுக்கு வட்டி செலுத்தாததால் தங்கும் விடுதி உரிமையாளர் காரில் கடத்தப்பட்டார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தம்பியான்கொல்லை பகுதியை சேர்ந்தவர் நாகநாதன் (வயது 42). தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவர் மெய்யம்புளியை சேர்ந்த முருகன் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம். அதற்கு மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்தாராம். இந்த நிலையில் ஒரு மாதம் வட்டி கொடுக்க தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முருகன் அப்பகுதியைச் சேர்ந்த சேதுபதி, பாஸ்கரன் ஆகியோருடன் நாகநாதன் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி உள்ளனர். இதை தடுக்க வந்த நாகநாதனின் மனைவியை கீழே தள்ளிவிட்டு அவரை காரில் கடத்தி சென்று விட்டார்களாம்.

இதுகுறித்து நாகநாதனின் மனைவி பூமதி ராமேசுவரம் நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து முருகன் உள்பட 3 பேரை பிடித்து ைகது ெசய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நாகநாதனை விடுவித்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் நாகநாதன் வீட்டுக்கு வரவில்லை என போலீஸ் நிலையத்துக்கு வந்து அவரது உறவினர்கள் முறையிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ராமேசுவரம் சென்று விசாராணை நடத்தினார்.

நாகநாதனை விரைவில் மீட்க போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். நாகநாதன் கடத்தப்பட்ட இடத்தின் அருகே போலீஸ் நிலையம், போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story