திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 19 Jun 2019 3:28 AM IST (Updated: 19 Jun 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

அடர்மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1,000 சதுர அடியில் 105 மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் அடர்மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1,000 சதுர அடியில் 105 மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. அப்போது அவர் வேம்பு, புங்கன், பூவரசு, நாவல் போன்ற மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜன், வேளா ண்மை துணை இயக்குனர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளா ண்மை) பிரதாப், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பி.வி.தயாளன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ், மாவட்ட திட்ட மேலாளர் கவுரிசங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story